கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மயிலாடுதுறை

அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியத்தை வழங்க வேண்டும். யு.ஜி.சி.யில் தகுதி பெறுவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும். அரசாணை 56-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் சங்க பொறுப்பாளர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டு கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கோஷம் எழுப்பினர்.


Next Story