காளையார்கோவில் அருகே கொட்டும் மழையில் குதிரை வண்டி பந்தயம்


காளையார்கோவில் அருகே கொட்டும் மழையில்  குதிரை வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 30 Aug 2023 7:00 PM GMT (Updated: 30 Aug 2023 7:00 PM GMT)

காளையார்கோவில் அருகே முளைப்பாரி திருவிழாவையொட்டி கொட்டும் மழையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே முளைப்பாரி திருவிழாவையொட்டி கொட்டும் மழையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி பந்தயம் கொல்லங்குடி-தொண்டி சாலையில் நடைபெற்றது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பந்தயம் நடைபெற்ற நேரத்திலும் பலத்த மழை பெய்ததால் மழையிலும் கூட பந்தயம் தொடர்ந்து நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 16 வண்டிகள் கலந்துகொண்டு முதல் மற்றும் 4-வது பரிசை திருச்சி மாவட்டம் உறையூர் விஜயா வண்டியும், 2-வது பரிசை கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ் வண்டியும், 3-வது பரிசை தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் வேலுபிரபாகரன் வண்டியும் பெற்றது. மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும், 2-வது பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும், 3-வது பரிசை மாவூர் தேவதாரணி வண்டியும், 4-வது பரிசை பூக்கொல்லை ரித்தீஸ்வரன் வண்டியும் பெற்றது. நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தேனி மாவட்டம் கோம்பை காளிதாஸ் வண்டியும், 2-வது பரிசை ஈளக்குடிபட்டி யாழினி வண்டியும், 3-வது பரிசை பொய்யாதநல்லூர் ரியல்அல்டாப் வண்டியும், 4-வது பரிசை பூவந்தி தியானபாண்டியன் மற்றும் கொல்லங்குடி கட்டாரி ஆகியோர் வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டியும், 2-வது பரிசை பூக்கொல்லை காளிமுத்து மற்றும் கொல்லங்குடி உடையப்பா வண்டியும், 3-வது பரிசை சாமியார்பட்டி மருது மற்றும் தனியாமங்கலம் போஸ் பாண்டி ஆகியோர் வண்டியும், 4-வது பரிசை வெற்றியூர் சிங்கத்துரை மற்றும் கள்ளந்திரி சிவபிரபு ஆகியோர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story