இஞ்சி அம்மன் கோவிலில் குதிரை திருவிழா


இஞ்சி அம்மன் கோவிலில் குதிரை திருவிழா
x

இஞ்சி அம்மன் கோவிலில் குதிரை திருவிழா நடந்தது.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த மின்னூர் கிராமத்தில் உள்ள இஞ்சி அம்மன் கோவிலில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை குதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் குதிரை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி இஞ்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் குதிரை அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க இஞ்சி அம்மனை பக்தி பரவசத்துடன் பாடல்கள் பாடி அம்மனை வரவேற்றனர்.

குதிரை மீது அம்மன் அருள் பெற்றவுடன் குதிரை தானாக கோவிலுக்கு ஓடி விடும். பின்னர் அம்மனுக்கு சிவப்பு பட்டாடை உடுத்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story