குதிரை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்


குதிரை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்
x

சாலையில் சுற்றித்திரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, குதிரை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் சேரிங்கிராஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அவ்வப்போது நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஊட்டி தமிழகம் சாலையில் குதிரைகள் சுற்றித்திரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர்கள் வைரம், மகாராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் சுற்றித்திரிந்த 3 குதிரைகளை மீட்டனர். மேலும் அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.3000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து குதிரைகளை சாலையில் சுற்றித்திரிய விட்டால் குதிரைகள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story