வாழை விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை


வாழை விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை
x

வாழை விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை வழங்கினர்.

கரூர்

கரூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்தில் வாழை 220 எக்ேடர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வாழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுக்கு கம்புகளை காற்றின் எதிர் திசையில் முட்டுக் கொடுக்க வேண்டும். வயல்களில் நீர் தேங்கா வண்ணம் நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். உரமிடுதலை தவிர்க்கவும். பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி போன்றவற்றை தெளிக்க வேண்டாம். காய்ந்த இலைகளை அகற்ற வேண்டும். மரங்களைச் சுற்றி மண் அணைத்தல் வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும். முக்கியமாக ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். இதற்கு பிரிமியம் தொகையாக ரூ.3,400 செலுத்த வேண்டும். இதில் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் கணினி சிட்டா, நடப்பு பயிர் சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் ஆதார் நகல் போன்றவைகளைக் கொண்டு வருகிற 28.02.2023-ந்திக்குள் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு கரூர் வட்டார தோட்டக்கலைதுறை அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story