தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்


தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தினமும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தோட்டக்கலைத்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்தநிலையில் நேற்று 13-வது நாளாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டக்கலைத்துறையில் தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பூங்கா பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் கஞ்சி காய்ச்சி ஊழியர்களுக்கு வினியோகித்தனர். தொடர் போராட்டம் காரணமாக, பூங்காக்களில் கோடை சீசன் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story