மருத்துவமனைக்கு 'சீல்' வைப்பு


மருத்துவமனைக்கு சீல் வைப்பு
x
திருப்பூர்


வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் முறையான அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

அரசு அனுமதி பெறாத மருத்துவமனை

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். பாலசுப்பிரமணியம். இவர் வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் செல்வநாயகி மெடிக்கல் இன்ஸ்டிட்யூட் ஆப் எலக்ட்ரோபதி என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

கடந்த 2021 -ம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார். இந்த மருத்துவமனைக்கு முறையான அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு 'சீல்' வைப்பு

இதனால் திருப்பூர் கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி மற்றும் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் மருத்துவமனைக்கு 'சீல்' வைத்தனர்.

இந்த மருத்துவமனையில் தற்போது 6 மாணவர்கள். 18 மாணவிகள் படித்து வந்துள்ளனர். அந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு இந்த மருத்துமனை பற்றி தகவல் கொடுத்துள்ளனர்,

இந்த மருத்துவமனையை நடத்திக்கொண்டு கல்லூரி என்ற பெயரில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வழங்கியும், முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் பாலசுப்பிரமணியன் சிகிச்சை அளித்து கொண்டும் வந்துள்ளார், தாசநாயக்கன்பட்டியில் செல்வநாயகி மருத்துவமனை என பெயரில் ஒரு மருத்துவமனையும் நடத்தி வருகின்றார். இந்த மருத்துவமனை குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

---


Next Story