விடுதியில் மருத்துவமனை ஊழியர் பிணம்


விடுதியில் மருத்துவமனை ஊழியர் பிணம்
x
தினத்தந்தி 24 Jan 2023 8:58 PM GMT (Updated: 2023-01-25T13:19:33+05:30)

விடுதியில் மருத்துவமனை ஊழியர் பிணமாக கிடந்தார்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ஜேசுஅமல்ராஜ் (வயது47). இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஜேசுஅமல்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி கை, கால் பாதிக்கப்பட்டார். அதன்பின்பு அழகப்பபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மேலும் அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தினசரி வாடகைக்கு அறை எடுத்து தங்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அறையில் தூங்க சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், அஞ்சுகிராமம் போலீசார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உறவினர்கள் மற்றும் போலீசார் விடுதிக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஜேசு அமல்ராஜ் கட்டிலின் கீழே பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story