ஓட்டல் தீப்பிடித்து எரிந்து சேதம்
வேப்பூரில் ஓட்டல் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
கடலூர்
வேப்பூர்:
வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள சேலம் சாலை அருகே கரூரை சேர்ந்த பழனிக்குமார் (வயது 49) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று ஓட்டலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பூட்டிக்கிடந்தது. இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் ஓட்டல் திடீரென தீப்பிடித்து எாிந்தது. இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ஓட்டலில் உள்ள சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
Related Tags :
Next Story