மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் அதிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் அதிபர் பலி
கன்னியாகுமரி
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரம்மேஸ்வரன் (வயது 59), ஓட்டல் அதிபர். இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். ரெயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் பிரம்மேஸ்வரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரம்மேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story