ஓட்டல் உரிமையாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் நகர ஓட்டல் உரிமையாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகர ஓட்டல் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் நிறுவன அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் ராஜா ராணி ரெசிடென்சியில் நடைபெற்றது. நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ஜி.ரங்கநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜாராணி பி.தாமோதரன் வரவேற்றார். செயலாளர் எஸ்.அமானுல்லா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஓட்டல் உரிமையாளர்கள் நல சங்க மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.கே.ராஜா, மாவட்ட பால் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் துணைத்தலைவர் டி.புக்குராஜ்குமார் உள்பட பலர் பேசினார்கள். இதில் ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் எம்.சங்கர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story