கார் மோதி ஓட்டல் தொழிலாளி பலி


கார் மோதி ஓட்டல் தொழிலாளி பலி
x

கார் மோதி ஓட்டல் தொழிலாளி பலி

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே சாலையோரம் நடந்த சென்ற ஓட்டல் தொழிலாளி மீது கார் மோதி பலியானார். இது தொடர்பாக நெஞ்சை பதற வைக்கும் வீடிேயா வைரலாகி வருகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓட்டல் தொழிலாளி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 50). இவர் பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பிரிவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கிக் கொண்டு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வெளியே கடைக்கு சென்று விட்டு ஓட்டலுக்கு திரும்ப செல்வதற்காக பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பல அடி தூரத்திற்கு அண்ணாதுரை தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தி்ல் மயங்கி கிடந்தார். ஆனால் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் க ாரை நிறுத்தாமல் சென்று விட்டார்.

பலி

இ்ந்த விபத்தில் பலத்த காயம்அடைந்த அண்ணாதுரையை அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அண்ணாதுரையை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அண்ணாதுரையின் அண்ணன் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவை வைத்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர். இந்த விபத்து சம்பவ கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.


Next Story