6 வீடுகள் இடித்து அகற்றம்


6 வீடுகள் இடித்து அகற்றம்
x
திருப்பூர்


உடுமலை நாராயணன் காலனியில், கழுத்தறுத்தான் பள்ளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 6 வீடுகள் நகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.

கழுத்தறுத்தான் பள்ளம்

உடுமலை நகராட்சி பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளம் (ஓடை) உள்ளது. உடுமலை பழனி சாலையில் இந்த ஓடையை ஒட்டி நாராயணன் காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

அப்போது வெள்ளம் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து விடும்.

இந்த நிலையில் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக உடுமலை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் கழுத்தறுத்தான் பள்ளத்தை (ஓடை) தூர்வாரி ஓடையின் 2 புறமும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக நாராயணன் காலனி பகுதியில் தூர்வாரும் பணிகளின் போது அந்த பகுதியில் சிலர் ஓடைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, வீடுகளின் பகுதிகளை விஸ்தரித்து கட்டியிருப்பது தெரியவந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜ், கட்டிட ஆய்வாளர் பழனிகுமார் ஆகியோர் நேற்று அந்த பகுதிக்கு சென்றனர்.

அங்கு அவர்களது முன்னிலையில், 6 வீடுகளில் ஓடையை ஆக்கிரமித்து


Next Story