வீடு புகுந்து 4 பவுன் நகை- பணம் திருட்டு
கொரடாச்சேரி அருகே வீடு புகுந்து 4 பவுன் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே வீடு புகுந்து 4 பவுன் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
கொரடாச்சேரி அருகே முகந்தனூரை அடுத்துள்ள மடப்புரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் கோவிந்தராஜ் (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வயலுக்கு சென்றுள்ளார். விவசாய பணிகடிள முடித்து விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
4 பவுன் நகை- பணம் திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் உள்ளே சென்ற பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுதொடர்பாக புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.