வீடு புகுந்து 5 பவுன் நகைகள் திருட்டு
வீடு புகுந்து 5 பவுன் நகைகள் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.
திருச்சி
முசிறியை அடுத்த சேருகுடி திராவிடன் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு வயல்காட்டுக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை திறந்துஅதில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 3 பவுன் தங்க நெக்லஸ் உள்ளிட்டவைகளை திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் வீடு திரும்பிய சீனிவாசன் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story