வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டுப்போனது
மதுரை சிலைமான் செல்வராஜ்நகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது 34). இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். காற்று வாங்குவதற்காக கதவை திறந்து வைத்திருந்த போது வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றார். இதுகுறித்து சுந்தர் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை துரைசாமி நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (36). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடி விட்டு தப்ப முயன்றார். அங்கு வந்த சரண்ராஜ் அந்த நபரை பொதுமக்களுடன் சேர்ந்து விரட்டி பிடித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் லட்சுமிபுரம் 8-வது தெருவை சேர்ந்த அகிலன் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.