வீடு புகுந்து தங்க நாணயங்கள் திருட்டு


வீடு புகுந்து தங்க நாணயங்கள் திருட்டு
x

வீடு புகுந்து தங்க நாணயங்களை திருடி சென்று உள்ளனர்

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து பாபநாசம் செல்லும் மெயின் ரோட்டில் முதலியார்மடம் அருகே உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருபவர் முத்துமாரி (வயது 48). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றார். இதை அறிந்த மர்மநபர்கள், சம்பவத்தன்று இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 10 கிராம் எடை கொண்ட 5 வெள்ளி நாணயங்கள், 5 கிராம் எடை கொண்ட 5 தங்க நாணயங்களை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story