வீடு புகுந்து நகை திருட்டு
சிவகாசியில் வீடு புகுந்து நகையை திருடி சென்றனர்.
சிவகாசி,
சிவகாசி காந்திநகரில் வசித்து வருபவர் பிரியா (வயது 28). இவர் ஆசாரி காலனி அங்கன்வாடியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு வந்துவிட்டார். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டில் உள்ள கேட் மற்றும் மரக்கதவில் இருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ திறந்து இருந்தது.
அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை சரி பார்த்த போது 6 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்து பிரியா சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகாசியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையை போலீசார் துரிதப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.