வீடு புகுந்து 3 பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 3 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து 3 பவுன் நகை திருட்டு

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி நேரு காலனியில் வசிப்பவர் சுந்தர்ராஜன் மனைவி ஜோதி (வயது 38). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ஜோதியிடம் தான் ரேஷன் கடையில் வேலை செய்வதாகவும், உங்கள் அண்ணன் எனக்கு நன்கு தெரியும் என்று கூறி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் தேவைப்பட்டால் என்னிடம் கூறுங்கள் நான் வீட்டிற்கு கொண்டு வந்து தந்துவிடுகிறேன் என்று கூறி உள்ளார்.

இதை நம்பிய ஜோதி தனது வீட்டின் எதிரில் உள்ள கடைக்கு சென்று கலர் வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த மர்ம நபர் ஜோதி வீட்டில் வைத்திருந்த 3 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து ஜோதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story