வீடு புகுந்து நகை திருட்டு


வீடு புகுந்து நகை திருட்டு
x

வீடு புகுந்து நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை மேட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை தனது உறவினர் வீட்டில் கொடுத்து விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டில் பின்புற ஜன்னலில் கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 கிராம் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story