வீடு புகுந்து நகை திருட்டு


வீடு புகுந்து நகை திருட்டு
x

சிவகாசியில் வீடு புகுந்து நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

மாரனேரி ஆ.துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் அருளப்பன் (வயது 58). இவரும், அவரது மனைவியும் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் சமையல் அறை திறந்து இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அருளப்பன் சமையல் அறையில் இருந்த சாவியை எடுத்து சென்று பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து அருளப்பன் மாரனேரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story