வீடு புகுந்து ரூ.2½ லட்சம்- வெள்ளி பொருட்கள் திருட்டு


வீடு புகுந்து ரூ.2½ லட்சம்- வெள்ளி பொருட்கள் திருட்டு
x

வீடு புகுந்து ரூ.2½ லட்சம்- வெள்ளி பொருட்கள் திருட்டு

மதுரை


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் காவேரி (வயது 41). இவர் மதுரை கருப்பாயூரணி ஸ்ரீ கங்கைபுரம் 2-வது தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். அப்போது அவருக்கு வீட்டின் அருகே வசிப்பவர்கள் போனில் உங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கொடுத்தனர். உடனே காவேரி மதுரையில் உள்ள வீட்டிற்கு விரைந்து வந்தார். அங்கு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 69 ஆயிரம், வெள்ளி கொலுசுகள், வெள்ளி வளையல்கள் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. பின்னர் அவர் கருப்பாயூரணி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story