வீடு புகுந்து நகை- பணம் திருட்டு


வீடு புகுந்து நகை- பணம் திருட்டு
x

சோளிங்கர் அருகே வீடு புகுந்து நகை- பணத்தை வாலிபர் திருடி சென்றார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்டராயப்பேட்டை காலனியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி கல்பனா (வயது 45).

இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி கல்பனா வீட்டுக்கு சென்று ரூ.1,000 கடன் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கல்பனா பணம் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து மறுபடியும் கல்பனாவிடம் சென்று கடன் கேட்டும், கல்பனா பணம் இல்லை என்று கூறிவிட்டார்.

உடனே வெளியே சென்ற வாலிபர் கல்பனாவுக்கு சிறிது கண்பார்வை தெரியாததால், வீட்டின் பின்பக்கமாக சென்று பீரோவில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் மற்றும் 1½ பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வாலிபரின் உறவினர்களிடம் கல்பனா கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் வாலிபர் வெளியூர் சென்று விட்டதாகவும், வந்தவுடன் நகை, பணத்தை வாங்கித்தருவதாகவும் கூறி உள்ளனர்.

ஆனால் அந்த வாலிபர் வராததால் கல்பனா சோளிங்கர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ரவி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story