பலத்த மழையால் வீடு இடிந்து சேதம்
பந்தலூரில் பலத்த மழையால் வீடு இடிந்து சேதம் அடைந்தது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, பாட்டவயல், தேவாலா, கரியசோலை, நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் பலத்த மழை பெய்தது. சேரங்கோடு அருகே காப்பிகாடு பாரதியார் நகரில் பார்வதி என்பவரது வீடு இடிந்து சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் வீட்டுக்குள் மழைநீர் ஒழுகுவதால், மேற்பகதியில் தார்பாய் போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து மழை பெய்வது வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story