திருமங்கலம் அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது- ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு
திருமங்கலம் அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது- ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு
மதுரை
திருமங்கலம்
திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கிழவனேரி கிராமம். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாக திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் அதிகாலை கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது வீடு எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இந்த கிராமத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டனர். வீடு இடிந்து விழுந்த போது ஆட்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வீட்டில் இருந்த சில பொருட்கள் மட்டும் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிழவனேரி கிராம நிர்வாக அலுவலர் வீடு இடிந்து கிடப்பதை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story