கள்ளக்காதல் விவகாரத்தில் வீட்டுக்கு தீ வைப்பு
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை
ராயக்கோட்டை அருகே கொப்பக்கரை ஊராட்சி தொட்டிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தீர்த்தகிரி மகன் சீனிவாசன் (வயது 35). விவசாயி. திருமணமாகி மனைவியை விவகாரத்து செய்தனர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் மனைவி சிவரஞ்சனிக்கும் (19) கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
இதனை அறிந்த முனியப்பன், சீனிவாசனின் தம்பி தூர்வாசனிடம் கேட்டு தகராறு செய்தார். மேலும் தூர்வாசனின் வீட்டுக்கு முனியப்பன் தரப்பினர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் டி.வி., பிரிட்ஜ், ஷோபா உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி முனியப்பன், ஹரிபிரசாத், கிருஷ்ணன், வேல்முருகன், இன்னொரு முனியப்பன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story