ஓய்வு பெற்ற முப்படை வீரர்களுக்கு வீட்டு வரியை ரத்து செய்ய வேண்டும்
ஓய்வு பெற்ற முப்படை வீரர்களுக்கு வீட்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஓய்வு பெற்ற முப்படை வீரர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. தலைவர் சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். துணைத் தலைவர் கே. அருண் முன்னிலை வகித்தார். நாகராஜ் வரவேற்றார். சட்ட ஆலோசகர் மேகநாதன் உள்பட திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமான ஓய்வு பெற்ற முப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற முப்படை வீரர்களுக்கு நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வீட்டு வரி ரத்து செய்யப்பட வேண்டும், குடும்ப ஓய்வூதியம் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்து பழையபடி முப்படைகளில் இளைஞர்களை தேர்வு செய்ய வேண்டும், திருப்பத்தூரில் ராணுவ கேண்டீன் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய மந்திரி மற்றும் கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். முடிவில் பொருளாளர் கே.முனியப்பன் நன்றி கூறினார்.