இல்லம் தோறும் தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம்
மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் இல்லம் தோறும் தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ராணிப்பேட்டை
அரக்கோணத்தை அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் அம்ரித் மகா உத்சவ் நிகழ்ச்சியின படி இல்லம் தோறும் தேசிய கொடி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கமாண்டன்ட் கவுரவ் தோமர் தலைமை தாங்கினார். மத்திய தொழில் பாதுகாப்பு படை மையத்தில் இருந்து தக்கோலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை வீரர், வீராங்கனைகள் கைகளில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இல்லம் தோறும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சியில் தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜனிடம் 200 தேசிய கொடியை கமாண்டன்ட் கவுரவ் தோமர் வழங்கினார். துணை கமாண்டன்ட்கள் பர்மிந்தர் கவுர், குர்ஷர் சிங், அங்கிட் சிங், சேத்னா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story