வீடு புகுந்து 16 பவுன் நகை-பணம் திருட்டு


வீடு புகுந்து 16 பவுன் நகை-பணம் திருட்டு
x

மணப்பாறையில் வீடு புகுந்து 16 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

மணப்பாறையில் வீடு புகுந்து 16 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எலக்ட்ரீசியன்

மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 57). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை இவர் பொருட்கள் வாங்க வெளியில் சென்று விட்டார். மகன் மற்றும் மகளும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் சிலம்பரசனின் மனைவி அமிர்தம் வீட்டை பூட்டி விட்டு சாவியை வெளியில் மறைவான ஒரு இடத்தில் வைத்து விட்டு மாடு மேய்க்க சென்று விட்டார்.

இதனிடையே பொருட்கள் வாங்க சென்றிருந்த சிலம்பரசன் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது.

வலைவீச்சு

இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story