வீடு புகுந்து 6½ பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 6½ பவுன் நகை திருட்டு
x

வீடு புகுந்து 6½ பவுன் நகைகளை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

வீடு புகுந்து 6½ பவுன் நகைகளை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருட்டு

ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 50). இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இரவில் வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது. இதனையடுத்து பாலாஜியின் தந்தை ரங்கநாதன் எழுந்து பார்த்த போது, வீட்டில் இருந்து மர்மநபர் ஒருவர் வெளியே ஓடிஉள்ளார்.

இதனையடுத்து அவர் பீரோவை பார்த்தபோது திறந்து கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் சங்கிலி, 1 ¾ பவுன் நெக்லஸ், ½ பவுன் தங்க மோதிரம், வைர மூக்குத்தி உள்பட 6 ½ பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்.

மாணவர் மாயம்

* திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 3-வது கிராஸ் முதல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (17). இவர் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் கோபாலகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ராமகிருஷ்ணன் உறையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

* திருச்சி திருவானைக் காவல் மல்லிகை புரத்தை சேர்ந்தவர் சூரியகுமார் (23). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்றதாக ஸ்ரீரங்கம் போலீசாரும், பாலக்கரை செங்குளம் காலணி பகுதியை சேர்ந்த முரளி (35) என்பவர் துரைசாமி புரம் பகுதியில் கஞ்சா விற்றதாக பாலக்கரை போலீசாராலும் கைது செய்யப்பட்டனர்.

லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது

* திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ஜெகன் (43) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். பாலக்கரை பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் (60), பிரபாகரன் (40) ஆகியோர் பெல்ஸ் மைதானம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக பாலக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் தென்னூர் பகுதியை சேர்ந்த இப்ராகிம்ஷா (53) என்பவர் தென்னூர் மந்தையில் லாட்டரி சீட்டு விற்றதாக தில்லை நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

*காட்டுப்புத்தூர் கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கார தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (36) என்பவரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

* முசிறி காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயபால் (52). கூலித்தொழிலாளியான இவர் தா.பேட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, உமையாள்புரத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் செல்வமணி (20) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெயபால் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயபால் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து ஜெயபால் மகன் வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story