மழைநீர் தேங்கி நின்றதால் வீடு இடிந்தது
மழைநீர் தேங்கி நின்றதால் வீடு இடிந்தது
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் பகுதியில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் சாலைகள் சேதம்அடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரையும், சாலை மற்றும் தெருக்களில் பள்ளங்களில் தேங்கிய மழை நீரையும் நகராட்சி நிர்வாகம் மோட்டார் மூலம் அகற்றியது.
ஆனாலும் நகராட்சி 16-வது வார்டு அழகாபுரி நகரில் வட்டமலை விநாயகர் கோவில் அருகில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டை சுற்றி மழை நீர் ேதங்கி நின்றது. இந்த ீவீட்டின் சுவர் மண்ணால் கட்டப்பட்டது. இதனால் சுவரின் அடிவாரம் நனைந்து
வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் வீட்டில் வசித்து வந்த குழந்தைசாமி (வயது 70) என்பவர் அப்போது வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார்.
சுவர் இடிந்து விழும்போது குழந்தைசாமி வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார். வீட்டில் இருந்த அவரது உடமைகள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.