இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் தரமானதாக கட்டப்படுகிறது


இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் தரமானதாக கட்டப்படுகிறது
x

இலங்கை தமிழர்களுக்கு தரமானதாக வீடுகள் கட்டப்படுவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

இலங்கை தமிழர்களுக்கு தரமானதாக வீடுகள் கட்டப்படுவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடியில் 220 பேருக்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்புகள் தரமற்றதாக கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலெக்டரிம் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த செங்கல், மணல், சிமெண்டு, சுவர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும் வீடுகளின் அளவையும் சரிபார்த்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தரமானதாக....

கட்டுமானத்தில் தரம் இல்லை என்று எழுந்துள்ள புகாருக்கு முன்னதாகவே 2 முறை தரம் குறித்து ஆய்வு செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில் கட்டுமானங்கள் தரத்துடன் இருப்பதாகவே முடிவுகளும் வந்துள்ளது. 3-வது முறையும் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காத வகையிலேயே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

வாரம் ஒரு முறை நான் நேரடியாக இங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். மேலும் தொடர்ந்து கண்காணிக்க தனியாக பொறியாளர் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் 3 ஒப்பந்ததாரர்களுக்கும் தொடர் அறிவுரை வழங்கி வருகிறோம். எனவே தரமான குடியிருப்புகள் கட்டப்படும். முகாமில் உள்ள மக்கள் கூடுதல் வசதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story