ரூ.3¾ கோடியில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்


ரூ.3¾ கோடியில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்
x

ஆம்பூர் அருகே ரூ.3¾ கோடியில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டுமான பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே மின்னூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் 76 வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என உதவி செயற்பொறியாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து சோலூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள் கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வெங்கிளி ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தையும் மற்றும் வெங்கிளி ஊராட்சி நூலகத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அருகில் உள்ள முருகன் கோவிலில் பயன்படுத்துகின்ற பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது.

இதன் காரணமாக ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன், நூலகர் சுகன்யா ஆகியோருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்க வேண்டும் என கலெக்டர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல்கலீல், கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story