திருவண்ணாமலையில் 19 குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா


திருவண்ணாமலையில் 19 குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா
x

திருவண்ணாமலையில் 19 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டாவை கலெக்டர் முருேகஷ் வழங்கினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் பழைய டான்காப் உள்ள பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்திற்கு அருகில் நில எடுப்பு செய்யப்படும் பட்டா இடத்தில் வசிக்கும் 19 குடும்பத்திற்கு மாற்று இடமாக திருவண்ணாமலையில் 4613.50 சதுர மீட்டர் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசால் ஆணை அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அந்த 19 குடும்பத்தினருக்கு மாற்று இடத்திற்கான வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ், அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். மேலும் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடுகள் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story