41 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா


41 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூரில் நடந்த ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில் 41 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாவை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூரில் நடந்த ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில் 41 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாவை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

ஜமாபந்தி நிறைவு

கீழ்வேளுர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 30-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். ஜமாபந்தியில் கீழ்வேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்வேளூர், தேவூர், கீழையூர், வேளாங்கண்ணி வருவாய் சரகங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்கள் பெறப்பட்டு 69 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

வீட்டுமனைப்பட்டா

இதில் 41 பேருக்கு வீட்டுமனை பட்டாவையும், 28 பேருக்கு சிட்டா நகலுக்கான ஆணையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) தமிமுல் அன்சாரி. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுதவிஜயரெங்கன், வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, மண்டல துணை தாசில்தார் சந்திரகலா, தலைமையிடத்து துணை தாசில்தார் இக்பால் நிஷா, அரசு துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story