தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்பு


தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்பு
x

நாட்டறம்பள்ளி அருகே தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்பு கட்டுவதற்கு அதிகாரி ஆய்வுசெய்தார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மணாங்கோயில் ஊராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில், நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் நிலைய அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு குடியிருப்பு அமைப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் ராஜேஷ், தலைமை நில அளவையர் பாபு, வருவாய் ஆய்வாளர்கள் வனிதா, அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story