மலைவாழ் மக்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சி
மலைவாழ் மக்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் அத்தி கோவில் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புதிதாக தமிழக அரசு மற்றும் ராம்கோ நிறுவனம் சார்பில் 12 பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இந்த வீடுகளை மலைவாழ் மக்களுக்கு வழங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இ்ந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டார்.
அப்போது அவர் மலைவாழ் மக்களின் குழந்தைகளை அழைத்து புதிய வீடுகளை திறக்க வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் திலகவதி, சப்-கலெக்டர் விஸ்வநாதன், சப்-கலெக்டர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்து முருகன், ஜெய்ந்த் உண்டு உறைவிடப் பள்ளி ராம்கோ மேலாளர் முருகேசன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, தாசில்தார் உமாமகேஷ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.