தேசிய விருதுக்கு ஆசிரியர் ராமச்சந்திரன் ேதர்வானது எப்படி?மாணவர்களை போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருகிறார்


தேசிய விருதுக்கு ஆசிரியர் ராமச்சந்திரன் ேதர்வானது எப்படி?மாணவர்களை போன்று சீருடை   அணிந்து பள்ளிக்கு வருகிறார்
x

தேசிய விருதுக்கு தேர்வான ஆசிரியர் ராமச்சந்திரன் தினமும் மாணவர்களை போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருகிறார். கல்விக்காக மாணவர்களுக்கு செல்போன்களும் வாங்கி கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

ராமநாதபுரம்

தேசிய விருதுக்கு தேர்வான ஆசிரியர் ராமச்சந்திரன் தினமும் மாணவர்களை போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருகிறார். கல்விக்காக மாணவர்களுக்கு செல்போன்களும் வாங்கி கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

தேசிய விருதுக்கு தேர்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலுர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றிவரும் இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு (வயது 40) தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்த பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும், கிராமத்து மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானது குறித்து ஆசிரியர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

எனது வாழ்நாளை அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக செலவிட்டு வருகிறேன். என்னுடைய சகோதரிக்கு கையெழுத்து கூட போட தெரியாது. அவரை போன்று யாரும் இருக்கக்கூடாது.

இன்றளவும் பல அரசு பள்ளி மாணவர்களின் திறன் வெளிக்கொண்டு வரப்படாமல் உள்ளது. அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுதான் எனது லட்சியம்.

நான் பணியாற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை 30 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது சொந்த செலவில் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுத்துள்ளேன். அதில் ஐ.பி.சி. டெக்னாலஜி மூலம் அவர்களுக்கு படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன்.

சீருடை அணிந்து வருவேன்

எனது மாத வருமானத்தில் பெரும் பகுதியை அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவு செய்து வருகிறேன். ஆரம்ப கல்வியில் தான் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை.

சரியான வழிகாட்டுதல் இல்லாததால் மாணவர்கள் திசைமாறுகின்றனர். நானும் பள்ளிக்கு வரும்போது மாணவர்களை போன்று, சீருடையை அணிந்துதான் வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், திரவியம் ராஜ் என்ற மகனும் உள்ளனர். அவரது மகன் அவரது சொந்த ஊரான செம்பொன்குடி அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.


Next Story