மரவள்ளிக்கிழங்கை தாக்கும் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
மரவள்ளிக்கிழங்கை தாக்கும் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மரவள்ளி செடிகளை அதிக அளவில் மாவு பூச்சி தாக்கி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையுடன் இணைந்து வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் நா.முத்துகிருஷ்ணன் நேற்று தானிப்பாடி, டி.வேலூர், சின்னியம்பேட்டை, ரெட்டியாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்யப்பட்டுள்ள விவசாய நிலத்திற்கு நேரடியாக சென்று மாவு பூச்சி கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது தோட்டக்கலை உதவி இயக்குனர் கங்கா, தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story