பருத்தியை தாக்கும் வெள்ளை ஈ நோயை கட்டுப்படுத்துவது எப்படி?


பருத்தியை தாக்கும் வெள்ளை ஈ நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
x

பருத்தியை தாக்கும் வெள்ளை ஈ நோயை கட்டுப்படுத்துவது எப்படி? என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான வை.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

பருத்தியை தாக்கும் வெள்ளை ஈ நோயை கட்டுப்படுத்துவது எப்படி? என நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான வை.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இலைப்பேன்

பருத்தி பயிரை பொறுத்த வரையில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பருத்தியில் 10 முதல் 20 சதவீதத்திற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. மஞ்சள் நிற அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற இலைப்பேன்களை இலைகளுக்கு அடியில் பார்க்கலாம்.

இது இலைப்பரப்பிற்கு அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சுருங்கியும், நுனி மொட்டுக்களை தாக்குவதால் அவை ஒழுங்கற்ற நுனிகளுடனும் காணப்படும். மேலும் செடியின் வளர்ச்சி குன்றி, பூ மற்றும் பூ மொட்டுக்கள் கீழே உதிர்த்துவிடுவதை காணலாம்.

வெள்ளை ஈ

இளம் பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் இலையின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் வெளிர் நிற புள்ளிகளைப் பார்க்கலாம். மேலும் இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலைகளில் உள்ள திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

தாக்குதல் அதிகமாகும்போது பூ, பிஞ்சு காய்கள், இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். வெள்ளை ஈக்களானது இலைசுருள் நச்சுயிரி நோயை பரப்பும் தன்மையுடையது.

மாவுப்பூச்சி

பருத்தியில் அனைத்து நிலைகளிலும் மாவுப்பூச்சி தாக்குதலை ஏற்படுத்தும் தன்மையுடையது. கூட்டம் கூட்டமாக இலைகளுக்கு அடியிலோ, தண்டுப் பகுதியிலோ, பூ மற்றும் காய்களிலோ இருந்து கொண்டு சாற்றை அதிக அளவில் உறிஞ்சும் தன்மையுடையது.

இதன் தீவிர பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பூ, இலை உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட செடிகளில் கேப்னோடியம் என்ற பூசணத்தைப் பார்க்கலாம். இதனால் செடிகள் முழுவதும் கருப்பு நிறமாக இருக்கும். நாளடைவில் செடிகள் வாடி இறந்து விடும்.

சிவப்பு நாவாய்ப்பூச்சி

பருத்தி காய்களில் உள்ள சாற்றை இளம்பூச்சிகளும், வளர்ந்த பூச்சிகளும் உறிஞ்சும். இதனால் காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பஞ்சு பழுப்பு நிறமாக மாறி, காயின் உள்ளே நீரில் ஊறிய புள்ளிகள் போல் இருப்பதைப் பார்க்கலாம். ஊடு பயிராக தட்டைப்பயிரை வளர்த்தால் பொறி வண்டுகளின் பெருக்கத்தை அதிகப்படுத்தி அசுவினி மற்றும் மாவுப்பூச்சிகளை அழிக்கலாம்.

வயலை சுற்றிலும் உள்ள களைகளை அழித்து விட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 மஞ்சள் நிற ஒட்டும் பொறி, ஊதா நிற ஒட்டும் பொறி வைத்து அசுவினி, வெள்ளை ஈ மற்றும் இலைப்பேன் முறையே அழிக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து பூச்சிகளை அழிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story