நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
x

நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;


நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மழை

திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்தது.சம்பாவில் சுமார் 50,000 ஏக்கர் மற்றும் தாளடியில் 20 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பயிர் நன்றாக செழித்து வளர்ந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களாக இரவில் குளிரும் பனிப்பொழிவும் உள்ளதால் பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது.

மஞ்சள் நிற தோகைகள்

அதிக குளிர் மற்றும் பணியால் பயிர் நிலத்திலிருந்து தழை உரச்சத்தினை தேவையான அளவு எடுத்துக் கொள்ள முடியாததாலும் பூசான நோய்களால் இலை புள்ளி, இலையுறை அழுகல் மற்றும் பாக்டீரிய இலை கருகல் நோய் என பல நோய்களால் பயிர் ஒரே நேரத்தில் தாக்கப்படுவதால் மஞ்சள் நிறத்தில் தோகைகள் மாற்றம் பெற்றுள்ளனஎனவே உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இயற்கை முறையில் நோயினை கட்டுப்படுத்துவதற்கு சூடோமோனாஸ் ½ கிலோ சாணி பாலில் கலந்து அத்துடன் 2லிட்டர் புளித்த தயிர் கலந்து தெளித்து பயன்படுத்தலாம்.

யூரியா

நோயின் தாக்குதல் அதிகமாக உள்ள இடங்களில்ஒரு ஏக்கருக்கு ஹெக்ஸா கோண சோல் 200 மில்லி அத்துடன் பிளான் டோ மைசின் 50 கிராம் மருந்து கலந்து 200 லிட்டர் நீரில் கைத்தளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.நோயுடன் குருத்துப்பூச்சி அல்லது ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் உள்ள இடங்களில் மஞ்சள் நோய்க்கு உரிய மருந்துடன் ஏக்கருக்கு 250 மில்லி பெப்ரோனில் மருந்து கலந்து தெளிக்க வேண்டும்.பயிர் வளராமல் மஞ்சளாக இருப்பதால் தலைச்சத்து அதிகமிட்டால் வளரும் என நினைத்து யூரியா உரத்தை நோய் உள்ள பயிரில் இட வேண்டாம். மருந்து தெளித்து நோயை கட்டுப்படுத்திய பின் உடனடியாக ஒரு கிலோ யூரியா ஒரு கிலோ ஜிங்க்சல்பேட் மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ் கலந்து 200 லிட்டர் நீரில் கலந்து இலை வழியாக தெளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story