உண்டியல் காணிக்கை ரூ. 93 லட்சம்


உண்டியல் காணிக்கை ரூ. 93 லட்சம்
x

கள்ளழகர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ. 93 லட்சம் வசூலானது.

மதுரை

அழகர்கோவில்,

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் உண்டியல்கள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ. 93 லட்சத்து 23 ஆயிரத்து 788 ரொக்கம், தங்கம் 59 கிராமும், வெள்ளி 565 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தது. உண்டியல் திறப்பின்போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் வளர்மதி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், அருட் செல்வன், பிரதீபா, ஆய்வாளர் அய்யம்பெருமாள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், சேவா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story