சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்


சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
x

திருவாரூர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கலி போராட்டம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கலி போராட்டம் நடந்தது. தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றாா்.

மனித சங்கிலி போராட்டம்

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தும் பிரிவினை வாதிகளை அனுமதிக்க மாட்டோம் என்ற பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் தெற்கு வீதியில் சமூக நல்லிணக்க மனித சங்கலி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு நாகை எம்.பி. செல்வராஜ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி திணிப்பு

சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் என்பது காலத்தின் கட்டாயமாகும். ஒரே நாடு, ஒரே மொழி என்ற பா.ஜனதா கட்சியின் கொள்கையை ஏற்க இயலாது. இந்தியா என்பது நாடு அல்ல. அது தேசம். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டாட்சி தத்துவ முறையில் செயல்படுகிறது. உயர்கல்வியில் பயிற்று மொழியாக உள்ள ஆங்கிலத்தை மாற்றி இந்தியை திணிக்க அமித்ஷா நினைப்பது ஏற்புடையதல்ல. எந்த மொழியையும் விரும்பி கற்பது வேறு. ஆனால் இந்தியை திணிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், தி.க. மாவட்ட தலைவர் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், த.மு.மு.க. மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், காங்கிரஸ் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மன்னை மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்னிலம்

நன்னிலத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் உலகநாதன் தலைமையில் நடந்த இ்ந்த மனித சங்கிலி நன்னிலம் பஸ் நிலையத்தில் தொடங்கி நடைபெற்றது

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போரட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் தேசிய குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, உலகநாதன், மாரிமுத்து எம்.எல்.ஏ., , இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் ஒன்றிய தலைவர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், நகர செயலாளர் கோபு, காங்கிரஸ் நகர தலைவர் எழில், தி.மு.க. நகர செயலாளர் ஆர். எஸ். பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குடவாசல்

குடவாசல் பஸ் நிலையம் அருகில் மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். குடவாசல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் 500-க்கும் மேற்பட்டவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story