சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்


சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
x

வேலூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

வேலூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுத்துள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் வேலூரில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் இளங்கோ, இளையராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

வேலூர் அண்ணாசாலையில் வரிசையாக கைகளை கோர்த்தபடி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story