மனித வனம் உயிரின முரண்பாடு தவிர்த்தல் விழிப்புணர்வு கூட்டம்


மனித வனம் உயிரின முரண்பாடு தவிர்த்தல் விழிப்புணர்வு கூட்டம்
x

குடியாத்தத்தில் மனித வனம் உயிரின முரண்பாடு தவிர்த்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் கோட்ட வனத்துறை சார்பில் குடியாத்தம், பேரணாம்பட்டு வனச்சரகம், குடியாத்தம் சமூககாடுகள் சரகம் ஆகியவற்றின் சார்பில் குடியாத்தத்தில் மனித வனம் உயிரின முரண்பாடு தவிர்த்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. வனச்சரக அலுவலர்கள் வினோபா, சதீஷ்குமார், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் உதவி வனப்பாதுகாவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி மனித வன உயிரின முரண்பாடு தவிர்த்தல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவைகளை பாதுகாப்பது குறித்தும், வனவிலங்குகள் மற்றும் பறவைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் வனவர்கள் மாசிலாமணி, சதீஷ்குமார், இளையராஜா, சரவணன், தயாளன் உள்பட குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த கிராம வனக்குழுக்களை சேர்ந்தவர்கள், விவசாயிகள், வனத்துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story