மனுநீதி நாள் முகாம்


மனுநீதி நாள் முகாம்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மனுநீதி நாள் முகாம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட ஜெகதளா அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு குன்னூர் கோட்டாட்சியர் புஷ்ணகுமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 55 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, துணை தாசில்தார்கள் சதீஸ்வர நாயக், நந்தகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், சுற்று வட்டார கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story