கடையநல்லூர் அருகே மனுநீதி நாள் முகாம்


கடையநல்லூர் அருகே மனுநீதி நாள் முகாம்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே மனுநீதி நாள் முகாம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள நயினாரகரம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜைனுல் ஆப்தீன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. நயினாரகரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா, இடைகால் ஊராட்சி மன்ற தலைவி முத்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர் மாரிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட 100 மனுக்களில் 73 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 11 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாதம் ரூ.1,000 வீதம் 22 பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களும் வழங்கப்பட்டன. மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை கலெக்டர் குணசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஷீலா, கலால் உதவி ஆணையாளர் ராஜ் மனோகரன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் உதயகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் தங்கம், ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் முருகச்செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருநாவுக்கரசு, துணை தாசில்தார் ராஜாமணி, ஆய்க்குடி வருவாய் ஆய்வாளர் சங்கரேஸ்வரி, வேளாண்மை உதவி அலுவலர்கள் கருப்பசாமி, வைகுண்டசாமி, கருப்பசாமி, முத்துராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சாந்தி, பிரபு சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story