மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருமருகலில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
திட்டச்சேரி:
திருமருகலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் நடந்தது. துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், இளைஞர் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு கட்சியின் பல்வேறு வளர்ச்சி குறித்து பேசினார். நிர்வாகிகளை அரசியல் ஒழுங்கு படுத்தும் வகையில் டிசம்பர் 9-ந்தேதி ஒரு நாள் அரசியல் பயிலரங்கத்தை வேளாங்கண்ணியில் நடத்துவது. கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகளை எதிர் வரும் மழை காலத்திற்குள் முழுமையாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.