மனிதநேய மக்கள் கட்சி கூட்டம்


மனிதநேய மக்கள் கட்சி கூட்டம்
x

சீர்காழியில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

சீர்காழியில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில நிர்வாகி ஹபிபுல்லா தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பக்கர், முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர் மன்ற கவுன்சிலர் முபாரக் அலி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட தலைவராக ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளராக ஏ.ஆர்.எம்.முபாரக் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக எருக்கூர் புகாரி, மாவட்ட பொருளாளராக ராயல் அப்பாஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவர்களின் நலன்கருதி கூடுதலாக பஸ் வசதி செய்து தர வேண்டும். கொள்ளிடம் முதல் நாகப்பட்டினம் வரை புறவழிச் சாலை விரிவுபடுத்தும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story