மனிதநேய வார நிறைவு விழா
திருப்பத்தூரில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா திருப்பத்தூர் பழைய கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் என்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பழங்குடியினர் திட்ட அலுவலர் ராஜ்ஸ்ரீ, மன்ற உறுப்பினர் டாக்டர் வினோதினி, நல்லாசிரியர் குப்பன், மாவட்ட நலக்குழு உறுப்பினர் ஞானமூர்த்தி, தலைமையாசிரியர் திருமால், ஓய்வு பெற்ற ஆசிரியர் தங்கமணி உள்பட பலர் பேசினார்கள். தீண்டாமை ஒழிப்பு, மனிதநேயம் குறித்து ஆதியூர் மாணவி கீர்த்தி பேசினார். மனிதநேயம் குறித்த நடனம், தனி நடனம் குழு நடனம், பறை இசை, நடைபெற்றது. இறுதியில் பாலன் நன்றி கூறினார்.